» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் வராததால் ஆவேசம்: மாணர்கள் சாலை மறியல்!

வியாழன் 11, ஜனவரி 2018 12:03:44 PM (IST)கோவில்பட்டி அருகே பஸ் வராததால் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினரின் உதவியுடன் அவர்கள் பள்ளிக்குச் சென்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கெச்சிலாபுரத்தினை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ –மாணவிகள் கோவில்பட்டி மற்றும் குருமலை ஊத்துப்பட்டியில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கடந்த 8 நாள்களாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கோவில்பட்டியில் இருந்து குருமலை செல்லும் அரசு பேருந்தும், மறு மார்க்கத்தில் கோவில்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து தாமதமாக வந்தாலும் மாணவர்கள் சிரமப்பட்டு சென்றனர்.

ஆனால் இன்று காலையில் இருந்து பேருந்து வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கோவில்பட்டி – குருமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் ஆய்வாளர் ஜூடி தலைமையில் விரைந்து வந்த போலீசார் மாணவர்களை சமதானப்படுத்தி, தங்களது வாகனம் மற்றும் அந்த வழியாக வந்த மினி ஆட்டோக்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

GanesanJan 13, 2018 - 10:50:58 AM | Posted IP 106.7*****

Super

GsnesJan 13, 2018 - 10:50:34 AM | Posted IP 106.7*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

Johnson's Engineers


New Shape Tailors
selvam aquaThoothukudi Business Directory