» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து மதத்தை இழிவுபடுத்துவதே திமுகவினரின் வாடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

சனி 13, ஜனவரி 2018 4:27:53 PM (IST)

இந்து மதத்தை இழிவுபடுத்துவதே திமுகவினரின்  வாடிக்கை என தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்துகள் பொதுவாகவே திமுகவைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தைப் பழிப்பதை, இழிவுபடத்தும் செயலை தங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்பதையே காட்டுகிறது. திமுக தலைவர் கருணாநிதி எவ்வழியோ அவ்வழியே அனைத்து தொண்டர்களும் அவரைப் பின்பற்றி இந்து மதத்தை புண்படுத்துபவர்களாகவே உள்ளனர். 

சேதுசமுத்திரத் திட்டத்தை பற்றி ஒரு உரையாடல் வருகின்ற நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி ராமர் என்ன பெரிய கட்டடப் பொறியாளரா வல்லுநரா என்று சொல்லி விமர்சனம் செய்தார். அந்த வழியாகத் தான் தான் இன்று கனிமொழி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதே என்னடைய கருத்து என்ற கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து மீதான விமர்சனத்திற்கு ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ திமுகவினரே இப்படித் தான் என்பது போல கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers


selvam aqua


Universal Tiles Bazar



New Shape Tailors




Thoothukudi Business Directory