» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:08:33 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளையும் நாளை (ஜன.15) மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன. 15) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றையதினம், மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers



New Shape Tailors




Universal Tiles Bazar

selvam aqua



Thoothukudi Business Directory