» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊரணியை ஆழப்படுத்த விடாமல் தடுக்கும் காங். பிரமுகர் மீது நடவடிக்கை: ஆட்சியரிடம் மனு

திங்கள் 12, பிப்ரவரி 2018 4:08:24 PM (IST)கயத்தாறு அருகே ஊரணியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், ஒனமாக்குளம் பகுதியைச் சேர்ந்த ஊர்மக்கள் சார்பில் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: எங்கள் ஊரில் ஆலமரத்து ஊரணி உள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்கள், கால்நடைகள் பயன்பெற்று வருகின்றன. இந்த ஊரணியை ஆழப்படுத்தி படித்துறை கட்ட கிராம மக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 

இதனால், ஊரணியை தூர்வார ஊர்மக்கள் முடிவு செய்து, தனி நபரிடம் வாகன உதவி பெற்று தூர்வாரினோம். ஆனால், அந்த பணிகளை தடுத்து, சிதம்பரபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் அய்யலுசாமி என்பவர் ஊர்மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊரணியை ஆழப்படுத்தி, படித்துறை கட்டிட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's EngineersNew Shape Tailors

crescentopticalsThoothukudi Business Directory