» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா வாகன திட்டத்தில் 8,855பேர் விண்ணப்பம் : ஆட்சியர் தகவல்

திங்கள் 12, பிப்ரவரி 2018 4:36:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா வாகன திட்டத்தில் பயன்பெற 8,855பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 8,855பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இதி்ல், ஊரகப் பகுதியில் 4,288 விண்ணப்பங்களும், நகர் பகுதியில் 4567 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 2534பேருக்கு வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டும். பாபநாசம் அணையில் வழக்கம்போல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் பிரச்சனை வராது என எதிர்பார்க்கப்படுகிறது. குளங்களில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 1060பேர் பங்கேற்றனர். இதுபோல் மாணவர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஸ்பிக் தொழிற்சாலை அருகே கடற்கரைப் பகுதியில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தூத்துக்குடியில் பள்ளிக் குழந்தைகள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNew Shape Tailors
crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers
Thoothukudi Business Directory