» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் ஒரே குறிக்கோள் : டிடிவி தினகரன் திட்டவட்டம்

சனி 6, ஜனவரி 2018 4:29:22 PM (IST)

அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் ஒரே குறிக்கோள் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன். இதனையடுத்து, பேரவை, தனி கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்துள்ளார் தினகரன். கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் ஒரே குறிக்கோள் என தினகரன் கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. இந்த பிரச்சனையில் அரசு சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். முதல்வர் மீதான குற்றச்சாட்டை போக்குவதற்கு போக்குவரத்துக்கழகத்துக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். 

தவறான நபர்களிடம் அதிமுகவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்துவிட்டது. தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே. கட்சியை மீட்டு எடுக்கவே முயற்சி செய்து வருகிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors


Johnson's Engineers



Universal Tiles Bazar

selvam aqua




Thoothukudi Business Directory