» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் : முதல்வர் பழனிசாமி தகவல்

சனி 13, ஜனவரி 2018 11:07:14 AM (IST)

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து பேசும்போது இதுகுறித்து அவர் கூறியதாவது: 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டி தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. 

இந்த ஆணையம் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை செய்யும் வகையில், இடஒதுக்கீடு குறித்த தனது பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி இறுதி அறிவிக்கை வெளியிடப்படும். மறு வரையறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழகத்தில் விரைவில் நடைபெறும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

New Shape Tailors





Johnson's Engineers

Universal Tiles Bazar




Thoothukudi Business Directory